Sunday, August 9, 2009

கோடை காலத் தனிமை

இந்த ஆண்டு (2009) கோடை விடுமுறைக்கு ஜூலை 13ல் மனைவியும் குழந்தைகளும் தமிழக்த்திற்குச் சென்றுவிட்டனர். நாள் தவராமல் நானும் அவர்களோடு தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்கள் ஊருக்குப் போன நாளிலிருந்து தொடங்கி தினமும் குறைந்தது ஒரு திரைப்படமென பல ஹாலிவுட் படங்களைப் பார்த்துவிட்டேன். எல்லாம் வீட்டில் ஒரு அரங்கத்தை அமைத்ததன் விளைவு. அவற்றில் சில:
ஊருக்குப் புறப்பட ஆயத்தமாக பல கடைகளை ஏறியிறங்கியும் ஆச்சு. eBay மற்றும் BestBuy போன்ற இடங்களிலுக்கும் சென்று வந்தாச்சு. அளவோடு வாங்கினாலும் எவ்வளவு தான் வாங்கினாலும் கண்டிப்பாக எதையாவது எவருக்காவது விட்டுவிட்டுத்தான் போயிருப்பேன். இது ஒவ்வொரு முறையும் நடப்பதுதானே.

வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு அறையாக ஒதுங்கு வைப்பது என்று சுத்தம் செய்தும் பொழுதை ஓட்டினேன். இருப்பினும் ஒன்று நிச்சயம், தனியாக வீட்டில் இருப்பதென்பது கொஞ்சம் சிரமமானதுதான். REC திருச்சியில் 89ல் கணிப்பொறியியல் முடித்து வெளியான பழைய நண்பர்களின் யாஹூ கூட்டம் மும்மரமாக பல புதிய நண்பர்களின் வருகையால் தீவிரமடைந்தது எனக்கு பொழுது போக நல்லமுறையில் பயன்பட்டது. பழைய நண்பர்களைத் தெரிந்துகொண்டதுடன் அவர்களுடன் பலப்பல பழம் பசும் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதும் மனதுக்கு நிறைவாக இருந்தது. தனியாக இருக்கும்போது இப்படி நண்பர்களின் தொடர்பு என்பது கானல் நீர் போன்றது.

இதுபோக ஒவ்வொரு வார இருதியிலும் யாரேனும் ஒரு நண்பரின் இல்லத்தில் ஒரு குட்டி Barbeque கூட்டம் என்று சென்றுவிடுவேன். எப்பொழுதுமே இம்மாதிரி சந்தர்ப்பங்களில் பிரிந்து வீட்டிற்கு வந்தவுடன், நண்பர்களைப் பார்க்குமுன் இருந்த தனிமையவிட அதற்கும் மேலாக தனிமைத்திரை மனத்தை இருக்கும். கோடையின் இருதியில், நியூயார்க் தமிழ்க் கழகம் என்று தொடங்கி தமிழ் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று நண்பர்களோடு சேர்ந்து வேலைசெய்து வருகின்றேன். இதுவன்றி சிலம்பொலி என்ற ஆற நிறுவனம் ஒன்றைனையும் தொடங்கும் வேலையில் மும்மரமாக செயல் பட்டுவருகிறேன். இது மனதுக்கு கொஞ்சம் அமைதியத் தருகின்றது; ஆனால் அப்பப்பா லொட்டு லொசுக்கு என்று வேலை சும்மா பென்டு நினித்துதுப்பா.

கையில் நிறைய காலம் நகராமல் ஊர்ந்துகொண்டேயிருப்பதால், உள்ளூர் மக்கள்கட்சி அரசியல் விருந்துகளுக்கும் போய்வந்தேன். ப்ருக்ஹேவன் மக்கள்கட்சியின் தலைவர்குழு விருந்து (Brookhaven Democratic Party Chairman's club dinner) ஜூலை இருதியில் பணிவழி நண்பர் விஞ்ஞானி ஹென்ரி-யின் இல்லத்தில் நடைபெற்றது. அவரது துணைவியார் மார்ஷா இவ்வட்டரத்தின் தலைவியாவார். நானும் அதற்குச் சென்று முன்னாள் ஆளுநர் மாரியோ குவோமோ அவர்களின் உரையைக்கேட்டு வந்தேன். அவரோடு மட்டுமின்றி பல ப்ருக்ஹேவன் அரசியல் பிரமுகர்களுடனும் ஒளிப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகிட்டியது. அதற்கடுத்த வாரத்தில் ராபர்ட் லோரி என்னும் பணி மேலாளர் நெடுந்தீவின் (Long Island) காங்கிரஸ் உறுப்பினர் டிம் பிஷப்புடன் ஒரு கலந்துரையாடலுக்கு என்னை அழைத்திருந்தார். பிஷப் மிகவும் வெளீபடையாகப் பேசி அனைவரின் கவனத்தையும் பெற்றார்; போக்குவரத்து செயற்குழுவில் உறுப்பினராக இருந்தாலும் நலக்கவனிப்பு (Health Care) பற்றிய அவரின் ஆழ்ந்த அறிவு குறிப்பிடத்தக்கது.

ஆண்டாண்டுக்கு வரும் கோடைக் கொண்டாட்டம் இம்முறையும் ஹென்ரியின் இல்லத்து கடற்கரையை ஒட்டிய புழைக்கடையில் (backyard) சிறப்பாக இருந்தது. இசையும் கவினும் பிரபாவும் இங்கு வரவில்லையே என்பது கொஞ்சம் வருத்தம்தான். சிறுபடகில் (canoe) கடலில் போய்வருது இசைக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். கவின் "புதையல் தேடலில்" நெடுநேரம் தன்னை மறந்து ஆழ்ந்திருப்பான். ஓ...அடுத்த ஆண்டு பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். இங்கு, Merlot, Shiraz, Sauvignon Blanc, Riesling, Chardonney, மற்றும் பல மதுக்கள் அளவோடு சுவைக்க எடுத்து வைக்கப்பட்டிருந்தன. இதில் ரீஸ்லிங் எனக்குப் பிடித்திருந்தது.

இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதி நானும் சென்னை போகப் போகிறேன், அதற்குள் துணிமணிகளை எடுத்து பெட்டிக்குள் வைக்கவேண்டும். ஹூம்ம்ம்... எதற்கெல்லாமோ கருவி கண்டுபிடிக்கும் இக்காலத்தில் பேக்கிங் செய்வதற்கும் ஒரு மெஷினைக் கண்டுபிடித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பேக்கிங் செய்யும் போது களைப்பு ஏற்பட்டால், மேலும் சில திரைப்படங்களைப் பார்க்கமாட்டேன் என்று உத்தரவாதம் கொடுக்க என்னால் முடியாது!

No comments:

Post a Comment